Education & Empowerment
சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் பிள்ளைகளின் கல்வி மற்றும் அறிவு மேம்பாட்டிற்காக தாம்பரம் கருணீகர் சங்கம் பல்வேறு முன்னெடுப்புகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மற்றும் கல்வி பயில விரும்பும் தகுதியான மாணவர்களுக்கு எங்களது சங்கம் தொடர்ந்து உறுதுணையாக இருந்து வருகிறது.
Tambaram Karuneegar Sangam is committed to the educational progress and empowerment of our community children. We strive to make quality education and career guidance accessible to all deserving students, supporting them to build bright futures.
பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் பொருளாதாரத்தில் நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி கட்டணத்தை செலுத்துவதற்கும், அவர்கள் தொடர்ந்து படிப்பதற்கும் ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
We provide annual scholarships and financial assistance to students from economically disadvantaged families, helping them complete their schooling and higher education.
மாணவர்கள் தங்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்குப் பிறகு சரியான படிப்பைத் தேர்ந்தெடுக்கவும், சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெறவும் துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்டு கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல் முகாம்களை நடத்தி வருகிறோம்.
We organize career counseling sessions and workshops led by professionals to guide students in choosing the right path after high school and discovering job opportunities.
நவீன காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப இளைஞர்களின் கணினித் திறன், தகவல் தொடர்புத் திறன் மற்றும் ஆளுமைத் திறன்களை வளர்க்கும் சிறப்புப் பயிற்சிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
We plan and facilitate programs focused on digital literacy, communication skills, and personality development to make our youth industry-ready.
புதிய கல்வியாண்டு தொடங்கும் போது, ஆரம்ப பள்ளி மாணவர்களுக்குத் தேவையான குறிப்பேடுகள், எழுதுபொருட்கள் மற்றும் பிற கல்வி உபகரணங்களை இலவசமாக வழங்கி வருகிறோம்.
At the start of every academic year, we distribute free study kits, notebooks, and writing materials to primary school students in need.
உங்கள் சிறிய பங்களிப்பும் ஒரு குழந்தையின் கல்வியையும் எதிர்காலத்தையும் மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது.
Your contribution, no matter how small, can empower a child with education and build a better future.