அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

கருணீகர் சங்கம் · தாம்பரம்

வள்ளலாரின் சைவநெறியில், நம் கருணீகர் குலமக்களின் ஒற்றுமை, வளர்ச்சி மற்றும் எழுச்சிக்கு வழிவகுக்கவும், ஏற்ற தாழ்வற்ற கருணீகர் சமூகம் ஏற்படவும், நலிந்தோர் மேம்படவும் செயல்படும் சமூக நலச்சங்கம்.

நம் சங்கத்தின் தொலைநோக்கம் & குறிக்கோள்கள்
நம் சங்கத்தின் தொலைநோக்கம்

வள்ளலாரின் சைவநெறியில், கருணீகர் மக்களின் ஒற்றுமை, சமூக முன்னேற்றம் மற்றும் நலிந்தோர் மேம்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட சங்கம்.

சைவநெறி ஒழுக்கம் குலமக்களின் ஒற்றுமை நலிந்தோர் மேம்பாடு
நம் சங்கத்தின் குறிக்கோள்கள்
  • வள்ளலாரின் சைவநெறியில் நடத்தல்
  • அருட்பெருஞ்சோதியை வணங்கி ஞானம் பெறல்
  • வறியோர்க்கு உதவுதல் (உணவு, கல்வி)
  • கல்வி உதவித்தொகை வழங்குதல்
  • இளைஞர் & மகளிர் முன்னேற்றம்
  • திறமைகளை ஊக்குவித்தல்
  • திருமண ஜாதக பரிமாற்ற சேவை
  • உறவுகளின் நிகழ்வுகளில் பங்கேற்றல்

வள்ளலார் பற்றிய சிறு குறிப்பு

அறிமுகம்

கருணீகர் சமூகம் தாம்ப்ரம் உருவாக்கியுள்ள இந்த இணைய தளத்திற்கு வருகை புரியும் அனைவரையும் வணக்கம். அன்பே உருவமாய் அருளே வடிவமாய் உலக உயிர்களின் துன்பம் போக்க அவதரித்தவர் திருவருட்பிரகாச வள்ளலார். அன்றைய தென்னாற்காடு மாவட்டம் இன்றைய கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் மருதூர் என்ற ஊரில் 05-10-1823 ஆம் வருடம் தமிழ் சுபானு வருடம் புரட்டாசி மாதம் 21 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு சித்திரை நட்சத்திரத்தில் பிறந்து முத்திரைப் பதிக்க கற்றவர் வள்ளலார். இவரது இயற்பெயர் இராமலிங்கம்.

பெற்றோர்கள்
தந்தையார் இராமையா பிள்ளை
தாயார் சின்னம்மையார்

வள்ளலார் வாழ்ந்த இடங்கள்

1823 – 1824
மருதூர்
1824 – 1858
சென்னை
1858 – 1867
கருங்குழி
1867 – 1870
கடலூர்
1870 – 1874
மேட்டுக்குப்பம்

வள்ளலார் கொள்கைகள்

1. எத்துணையும் பேதமுறாது எல்லா உயிரும் தம் உயிர்போல் எண்ணும் நோக்கம் வேண்டும்.
2. கடவுள் ஒருவரே: அவர் ஒளி வடிவானவர் (அருட்பெருஞ்ஜோதி).
3. கண்மூடி வழக்கெல்லாம் மண்மூடி போக வேண்டும்.
4. தானம் தவம் இரண்டும் இரு கண்கள்.
5. புலால் மறுத்து உயிர் ஓம்புதல், பசித்தவர்களுக்கு பசிதீர்த்தல்.
6. எதிலும் பொது நோக்கம் வேண்டும்.

வடலூரில் வள்ளலார் நிறுவிய தெய்வ நிலையங்கள்

1865
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்
Established to spread universal brotherhood and spiritual equality.
1867
சத்திய தருமச்சாலை
Providing free food to hungry people continuously to this day.
1872
சத்திய ஞான சபை
The Hall of True Wisdom representing light as God.
1874
மேட்டுக்குப்பம் சித்தி வளாகம்
The sacred space where Vallalar achieved spiritual transformation.